வாசுதேவ நல்லூர் ஒன்றிய கவுன்சிலர் தேர்தல்: அதிமுக சார்பில் 4 பேர் வேட்பு மனு

அதிமுக சார்பில் 4 வேட்பாளர்கள் வாசுதேவநல்லூர் முன்னாள் எம்எல்ஏ அ. மனோகரன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்;

Update: 2021-09-20 21:39 GMT

வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னாள் எம்எல்ஏ அ மனோகரன் தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, அதிமுக சார்பில் சார்பில் போட்டியிடும், தெற்கு ஒன்றிய பகுதி சேர்ந்த 4 வேட்பாளர்கள் வாசுதேவநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அ மனோகரன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சவுக்கை வெங்கடேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் துரை பாண்டியன், பேரூர் செயலாளர்கள் வாசுதேவநல்லூர் சீமான், மணிகண்டன், ராயகிரி சேவுக பாண்டியன், சிவகிரி காசிராஜன், மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் சசிகுமார் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News