வாசுதேவநல்லூரில் வேன் விபத்தில் 22 பேர் காயம்: போன் பேச்சால் விபரீதம்

வாசுதேவநல்லூரில், செல்போனில்பேசிக் கொண்டே ஓட்டியதால் வேன் விபத்துக்குள்ளானது. இதில் 22 பேர் காயமடைந்தனர்.

Update: 2021-09-10 06:15 GMT

விபத்துக்குள்ளான வேன்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள அருளாட்சியில் இருந்து,  சங்கரன் கோவில் அருகே உள்ள நெடுமன்குளத்திற்கு திருமண வீட்டார், மறுவீட்டுக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். வேனை, அருளாட்சியைச் சேர்ந்த பர்னபாஸ் மகன் சார்லஸ் (40) ஓட்டி வந்தார்.

அப்போது, செல்போனில் தனது நண்பருடன் பேசிக்கொண்டு வந்தார். இதனால், கவனக்குறைவால் வேன் நிலைதடுமாறி வாசுதேவநல்லூர் அருகே உள்ளதரணி சர்க்கரை ஆலை முன்பு, திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த மையத்தடுப்புச் சுவர் மீது மோதியது. அந்த வேன் தலைகீழாக கவிந்தது.

இதையடுத்து, வேனை ஓட்டி வந்த சார்லஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.  அதில் பயணம் செய்த 22 பேருக்கும் காயம்  ஏற்பட்டது அவர்களை,  அருகே உள்ள ஆத்து வழியைச் சேர்ந்த பொதுமக்களும் வாசுதேவநல்லூர் காவல்துறையினரும் மீட்டு, வாசுதேவநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தால், தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாசுதேவநல்லூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News