கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது: புளியங்குடி காவல்துறையினர் அதிரடி
புளியங்குடி காவல் துறையினரின் அதிரடி வேட்டையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
தமிழகம் முழுவதும் காவல்துறையினர் பல்வேறு குற்ற வழக்குகளை சாதுரியமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை கண்காணித்து குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க அவர்களையும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் சம்பந்தமான வழக்குகளை தீவிர கண்காணித்து போதை பொருள் பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் தென் மண்டல ஐஜி ஆசரா கார்க் உத்தரவின் பேரில் தென் மாவட்டங்களில் காவல்துறையினர் தீவிர சோதனை மற்றும் அதிரடி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வப்போது தனிப்படையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனை, சந்தேகப்பிடியாக இருக்க நபர்களை பிடித்து விசாரணை என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன் நிலையில் தென்காசி மாவட்டம், புளியங்குடி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்தும், கஞ்சா போதையில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வரும் நபர்களை தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் நேற்று துணை காவல் கண்காணிப்பாளர் அசோக் உத்தரவின் பெயரில் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், பயிற்சி சார்பு ஆய்வாளர் செல்வ மாணிக்கம் மேலும் காவலர்கள் அடங்கிய குழு நடத்திய அதிரடி வேட்டையில் கார்த்தி, மருது, பாலவிக்னேஷ், கிருபாகரன், ராஜேஷ் மற்றும் திருப்பதி ஆகிய 6 நபர்களை பல்வேறு பகுதிகளில் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய இளங்கோவன், திருமலை, சந்துருபிரசாத் மற்றும் மகேஷ் ஆகிய 4 நபர்களை தேடி வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட 06 நபர்களிடமிருந்து சுமார் 50,000 மதிப்பிலான 2 கிலோ கஞ்சா, 2 அரிவாள்கள், 1,41,000/- ரூபாய் பணம், 5 செல்போன்கள், ஆட்டோ மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.