வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் 13 ஒன்றிய கவுன்சிலர் பதவியேற்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் 13 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.;

Update: 2021-10-20 15:15 GMT

பைல் படம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் திமுக ஒன்பது இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வாசுதேவநல்லூர் சேர்மன் பதவியை கைப்பற்றியது.

3வது வார்டில் முனியராஜ், 4 வது வார்டில் செல்வி, 5 வது வார்டில் சரஸ்வதி, 6வது வார்டில் முத்தையா பாண்டியன், 7வது வார்டில் ஜெயராம், 8வது வார்டில் அருணாதேவி, 9வது வார்டில் விமலா, 12வது வார்டில் லில்லி புஷ்பம், 13 வது வார்டில் சந்திரமோகன் ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

1-வது வார்டில் பாண்டியம்மாள், இரண்டாவது வார்டில் கனகராஜ் ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் பத்தாவது ஆண்டில் மகாலட்சுமி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் 11 வது வார்டில் விஜய பாண்டியன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவ்வாறு புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Tags:    

Similar News