மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 4 பேர் கைது

Update: 2021-01-22 05:30 GMT

தென்காசி மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், பாறைப்பட்டி பகுதியில் சண்முகையா என்பவர்க்கு சொந்தமான தரிசு நிலத்தில் எந்தவொரு அனுமதியும் பெறாமல் டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரங்களின் மூலம் மணல் கடத்துவதாக அரியூர் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், புளியங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர் மணல் திருட்டில் ஈடுபட்ட பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் சண்முகையா, சின்னசாமி என்பவரின் மகன் ராசு(36), ராமச்சந்திரன் என்பவரின் மகன் கோபால்(26) மற்றும் குருசாமி என்பவரின் மகன் சுதாகர்(28) ஆகிய 4 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ராசு, கோபால் மற்றும் குட்டி ஆகிய மூன்று நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்கள், ஜேசிபி இயந்திரம் மற்றும் திருடப்பட்ட மணல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது

Tags:    

Similar News