பறக்கும்படை சோதனை- 1.84 லட்சம் பறிமுதல்

Update: 2021-03-11 11:30 GMT

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லுார் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற 1.84 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரிவலம்வந்தநல்லுார் அருகே தேர்தல் பறக்கும்படை அதிகாரி முத்துப்பாண்டி தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பாப்பான்குளம் பகுதியை சேர்ந்த ராமசுப்பு என்பவரது மகன் முருகன் சரக்கு வாகனத்தில் ஈரோடு சென்று கொண்டு இருந்த போது பறக்கும் படையினர் அவரது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 1,84,500 யை பறிமுதல் செய்து சிவகிரி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர் .

Tags:    

Similar News