தென்காசி மாவட்டத்தில் மீண்டும் மழை!

தென்காசி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.

Update: 2023-12-22 02:30 GMT

பட விளக்கம்: மழையில் குடையை பிடித்தவாறு செல்லும் பொதுமக்கள்

தென்காசி மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள கருப்பா நதி, கடணா நதி, ராமநதி, குண்டாறு உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பின. அது மட்டுமல்லாது மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் முழுமையாக நிரம்பியது. தொடர்ந்து மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. 

தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாகமழை பொழிவு எதுவும் இல்லை. இந்த சூழ்நிலையில் தென்காசி மாவட்டத்தில் இன்று காலை முதலே மாவட்ட முழுவதும் வெயில் இல்லாமல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த சூழ்நிலையில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையம், பாவூர்சத்திரம், கடையநல்லூர், சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென  மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும்  மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் இன்று, 2023 டிசம்பர் 22 அன்று மழைக்கு வாய்ப்பு குறைவு இன்று வானம் மேகமூட்டமாக இருக்கும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகும். UV குறியீடு 9 ஆக இருக்கும்.

நாளை, 2023 டிசம்பர் 23 அன்று தென்காசி மாவட்டத்தில் வானம் பகுதியாக மேகமூட்டமாக இருக்கும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகும். UV குறியீடு 9 ஆக இருக்கும்.

இந்த வாரம் தென்காசி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது.

Tags:    

Similar News