குழந்தைகளுக்கான நியுமோகோக்கல் தடுப்பூசி முகாமினை கலெக்டர் தொடங்கி வைத்தார்

தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான நியுமோகோக்கல் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தொடங்கி வைத்தார்.\

Update: 2021-07-23 10:26 GMT

குழந்தைகளை அதிகம் பாதிப்படையச் செய்யும் நியுமோகோக்கல் நிமோனியா பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று நோயில் இருந்து அவர்களை காக்கும் பொருட்டு, தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நியுமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

அதன்படி தென்காசி மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று குழந்தைகளுக்கான நியுமோகோக்கல் தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த தடுப்பூசியானது ஒன்றரை மாதம், மூன்றரை மாதம் மற்றும் ஒன்பது மாத குழந்தைகளுக்கு அளிக்கப்படும். 3 தவனையாக செலுத்தப்படும் 12 ஆயிரம் மதிப்புள்ள தடுப்பூசி அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

எனவே இந்த தடுப்பூசியை அரசு தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வாரம்தோறும் புதன்கிழமை செலுத்தப்படும் எனவும் எனவே பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு நியுமோகோக்கல் தடுப்பு ஊசி செலுத்தி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு மருத்துவர்கள், தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News