தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்
தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.;
தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், 130 கோடி மக்களுக்கு சோறு போடும் நமது விவசாயத்தையும் விவசாயிகளையும் அழித்து பெரும் முதலாளிகளுக்காக கொண்டுவரப்பட்ட 3 வேளாண்மை சட்டங்களையும் மற்றும் மின்சார திருத்த மசோதா 2020, சாலை பாதுகாப்பு சட்டங்கள், திருத்தப்பட்ட தொழிலாளர்கள் சட்டத் தொகுப்புகளையும், பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி விவசாயிகளை அழிக்கும் வேளாண்மை விரோத மசோதாவை வாபஸ் வாங்க வேண்டும்.
விவசாய விளை பொருளுக்கு M.S. சுவாமிநாதன் குழு பரிந்துரையின் படி குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை நிறைவேற்றவது மற்றும் விவசாயிகளுக்கு கொரோன கால நிவாரண நிதியாக 1 லட்ச ரூபாய் வழங்க வேண்டும்.
அயல் நாட்டில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது போல் நமது விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகையாக ரூ.50000 வழங்க உத்தரவிட வேண்டும். வெளிநாடுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் ரூ.30க்கு ஏற்றுமதி செய்யும் இந்திய அரசு சொந்த மக்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் டீசல் ரூ 30க்கு அதேபோல் வழங்க வேண்டும் என்பன பாேன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் சிஐடியூ சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.