கரடியின் அட்டகாசத்தால் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவிக்கும் தம்பதிகள்

தென்காசி அருகே கரடியின் அட்டகாசத்தால் வீட்டிற்கு செல்ல முடியாமல் வயதான தம்பதி பரிதவித்து வருகின்றனர்.

Update: 2023-04-18 06:37 GMT

வீட்டில் சுற்றுச்சுவரை தாண்டிச் செல்ல முயற்சிக்கும் கரடி.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அடிவாரத்தில் அமைந்துள்ளது தென்காசி மாவட்டம். இங்கு அடிக்கடி வன விலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்கள் ஆகிய இடங்களை சேதப்படுத்தி வருகின்றன. அவ்வப்போது மனிதர்களையும் தாக்கி வருகின்றன.

இந்த நிலையில், குற்றாலம் அருகே புலி அருவி செல்லும் பாதையில் லட்சுமி கோட்ரஸ் அமைந்துள்ளது. இங்கு தம்பதிகள் ஒரு பங்களாவில் பணி செய்து வருகின்றனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இங்கு ஒரு கரடி ஒன்று புகுந்துள்ளது. கரடி இன்று வரை அப்பகுதியில் சுற்றி திரிகிறது.

இது தொடர்பாக வனத்துறையிடம் பல முறை புகார் அளிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 15 நாட்கள் ஆணநிலையில் வீட்டுக்குள் செல்ல முடியாமல் தம்பதிகள் சாலையில் ஆங்காங்கே தங்கி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவசைலம் பகுதியில் கரடி 3 பேரை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. எனவே வனத்துறையினர் உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு விரைந்து சென்று கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News