ஊரடங்கு விதி மீறியவர்கள் - எச்சரித்த காவல் துறையினர்
தென்காசி முழுவதும் ரோந்து பணி...;
தமிழகத்தில் கொரோணா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இரண்டு வார முழு உடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இன்று முதல் அதிகாலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே காய்கறி கடைகள் பல சலுகைகள் இயங்க தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தென்காசி பகுதிகளில் முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க காவல்துறையினர் சாலையில் தடுப்பு ஏற்படுத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி குற்றாலம் செல்லும் சாலையில் காவல்துறையினர் தேவையில்லாமல் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வருகின்றனர். மேலும் தென்காசி முழுவதும் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்