சங்கரன்கோவிலில் நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி சங்கம் வேலை நிறுத்தம்
நூல் விலை உயர்வை கண்டித்து வாரத்தில் 3 நாட்கள் உற்பத்தியை நிறுத்த போவதாக விசைத்தறி சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேட்டி.;
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி வாரத்தில் மூன்று நாட்கள் உற்பத்தியை நிறுத்தப்போவதாக தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் பேட்டி.
நூல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆறு இலட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றனர். அதனால் ஒன்பது இலட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பத்து மாதங்களாக நூல் விலையானது நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது. அதனால் உயர்ந்து வரும் நூல் விலை உயர்வை கண்டித்து வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி, ஆகிய மூன்று நாட்கள் உற்பத்தி நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும்.
இந்த வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு 400கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி பாதிப்பு அடைகிறது. மேலும் மத்திய மாநில அரசுக்கு வரக்கூடிய வருமானமும் இழப்பு ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர்களிடம் நாளை மனுகொடுக்க முடிவு செய்துள்ளோம். எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நூல் விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என தமிழநாடு விசைத்தறி சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் சங்கரன்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.