மக்காச்சோளப் பயிர்களை அழிக்கும் காட்டுப்பன்றிகள்
விவசாய இடத்தில் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் மக்காச்சோள பயிர்களை ஒடித்து தின்று அழிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது,
சங்கரன்கோவில் அருகே அரியூர் மலையை ஒட்டியுள்ள விவசாய இடத்தில் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் மக்காச்சோள பயிர்களை முறித்து தின்று அழிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது,..
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி,மான், காட்டுப்பன்றிகள்,பாம்பு,கடமான் உள்ளிட்ட அதிகமான விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த விலங்குகள் மலையடிவார பகுதிகளில் அமைந்துள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
சங்கரன்கோவில் அருகே இருமன்குளம் கிராமத்தின் வடபுறம் உள்ள அரியூர் மலையில் காட்டுபன்றிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மலையை ஒட்டியுள்ள விவசாய இடங்களில் இரவு பகல் பாராது மனிதர்களின் நடமாட்டத்தை நோட்டமிட்ட காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து மக்காச்சோள பயிர்களை முறித்து தின்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
நூற்றுகணக்கான ஏக்கர் பரப்பளவு உள்ள மக்காச்சோள பயிர்களை நாள்தோறும் காட்டுப்பன்றிகள் அழித்து நாசம் செய்து வருவதால் இருமன்குளம், கண்டிகைப்பேரி, அச்சம்பட்டி, அரியூர், வடக்குப்புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே காட்டுப்பன்றிகள் விவசாய இடங்களில் புகுந்து நாசம் செய்வதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.