சங்கரன்காேவிலில் வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி: நகராட்சி ஊழியர்கள் தீவிரம்
உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி சங்கரன்கோவில் நகராட்சியில் வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது;
சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு இயந்தரங்களை சரிபார்க்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு இயந்தரங்களை சரிபார்க்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் பதினான்கு மேஜைகளில் 900 வாக்கு இயந்திரங்களை சரிபார்க்கும் பணியில் புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, சங்கரன்கோவில் உட்பட ஏழு நகராட்சியை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.