அனுமதியின்றி மண் அள்ளிய லாரியை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம்

சங்கரன்கோவில் அருகே அனுமதியின்றி செம்மண் அள்ளிவந்த லாரியை கிராம மக்கள் சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம்.

Update: 2022-01-29 12:45 GMT

கரிசல்குளம் மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அனுமதியின்றி மண் அள்ளிய லாரியை சிறைப்பிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

சங்கரன்கோவில் அருகே அனுமதியின்றி செம்மண் அள்ளிவந்த லாரியை கிராம மக்கள் சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம். வட்டாச்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள துரைச்சாமியாபுரம் பஞ்சாயத்திற்குட்பட்ட கீழ கரிசல்குளம் மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அனுமதியின்றி கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக இருபதுக்கும் மேற்பட்ட லாரிகளில் செம்மண் இரவு, பகல் பாராது தொடர்ந்து கடத்தி செல்கின்றனர்.

இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கீழ கரிசல்குளம் கிராம மக்கள் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் செம்மண் அள்ளி வந்த லாரியை சிறைப்பிடித்து மூன்று மணி நேரத்திறகும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்..

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர் அதில் போராட்டகாரர்களுக்கும், காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சிவகிரி வட்டாச்சியர் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதியின்றி செம்மண் அள்ளியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியத்து மண் அள்ளிய இடத்தை பார்வையிட்ட பின்னர் சிறை பிடித்த லாரியை விடுவித்தனர்.

தொடர்ந்து சங்கரன்கோவில், புளியங்குடி, சிவகிரி, கரிவலம் கூடலூர் ஆகிய பகுதிகளில் ஆளுங்கட்சியினர் தொடர்ந்து கனிம வள கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தமிழகஅரசு கனிமவளக்கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Tags:    

Similar News