சங்கரன்கோவில் அருகே மணல் கடத்திய வாகனங்களை கிராம மக்கள் சிறைபிடிப்பு

கூடலூர் பகுதியில் அனுமதியின்றி செம்மண் எடுத்த வாகனங்களை கூடலூர் கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-12 05:27 GMT

கூடலூர் பகுதியில் அனுமதியின்றி செம்மண் எடுத்த வாகனங்களை கூடலூர் கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கூடலூர் பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக செம்மண் எடுத்த வாகனங்களை கூடலூர் கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஒரு வார காலமாக இரவும் பகலும் செம்மன் கடத்தலில் சட்டத்துக்குப் புறம்பாக ஜேசிபி பொக்லைன் எந்திரங்கள் கொண்டு செல்லப்படுவதாக வருவாய் துறையினர் காவல் துறையினருக்கும் கூடலூர் பொதுமக்கள் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வருவாய்த் துறையிலிருந்து எந்த ஒரு அதிகாரியும் வந்து பார்வையிட கூட இல்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தங்களது விவசாய நிலத்தில் உள்ள கிணறுகளில், சட்டத்திற்குப் புறம்பாக மணல் அள்ளப்படுவதால் தண்ணீர் கூட வருவதில்லை என்று வேதனை தெரிவித்தனர். உடனடியாக அரசு அதிகாரிகள் தங்களது கடமையை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News