சங்கரன்கோவில் பகுதியில் காய்கறி விலை கடும் உயர்வு: பாெதுமக்கள் அவதி
காய்கறிகளின் விலையேற்றதால் சங்கரன்கோவில் பகுதி மக்கள்மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
காய்கறிகளின் விலையேற்றதால் சங்கரன்கோவில் பகுதி மக்கள்மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
வடமாநிலங்கள் உட்பட தமிழகத்தில் வட மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்து வருவதால் காய்கறிகளின் வரத்து குறைந்து வருவதால் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கத்தரிக்காய், தக்காளி, அவரைக்காய், பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், தேங்காய், மாங்காய், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் அனைத்தும் ரூ40லிருந்து 50ரூபாய் வரை விற்பனை செய்த காய்கறிகள் தற்போது 100 முதல் 140வரை காய்கறிகளின் விலையேற்றமானது அதிகரித்து வருகிறது.
அதனால் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதி வியபாரிகள் அதிக லாபம் வைத்து பொதுமக்களிடம் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும் அதிக விலையின் காரணமாக பொதுமக்களும் காய்கறிகளை வாங்குவதற்கு தயக்கம் கொள்கின்றனர். அதனால் காய்கறிகள் வியாபாரிகள் அனைவரும் வேற வழியில்லாமல் காய்கறிகளை வாங்கிய விலைக்கே விற்பனை செய்து வருகிறோம் என வியபாரிகள் தெரிவித்தனர்.
பெட்ரோல் விலையை விட உயர்ந்து வரும் காய்கறிகளின் விலையேற்றத்தால் பொதுமக்கள், வியபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தற்போது கோழி இறைச்சியின் விலையை காய்கறிகளின் விலை நெருங்கி வருவருதால் பாமர மக்கள் அச்சமடைந்துள்ளனர்.