கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் வருஷாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஶ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவிலில் வருஷாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஶ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவிலில் வருஷாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது .இதில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் ஸ்ரீ பூவனநாத சுவாமி திரு கோவில் 70 ஆண்டு வருஷாபிஷேக விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் கோவில் மண்டபத்தில் கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக வந்து சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சாலகார கோபுர கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ,மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் சத்யா, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமசந்திரன், நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கே.பி.ராஜகோபால், கோவில்பட்டி நகராட்சி 20வது வார்டில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் த.மா.கா வேட்பாளர் விக்னேஷ்ராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், ஓட்டப்பிடாரம் முன்னாள் ஒன்றிய செயலாளர் போடூசாமி, பழனிக்குமார், மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.