சங்கரன்கோவிலில் பல்வேறு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ, ஆட்சியர் வழங்கல்

சங்கரன்கோவிலில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வழங்கினார்கள்.

Update: 2021-11-13 16:00 GMT

சங்கரன்கோவிலில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் இணைந்து பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

சங்கரன்கோவிலில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் இணைந்து பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் தலைமையில் நடைபெற்றது.தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் ஐந்து பயனாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்குதல், 27 பயனாளிகளுக்கு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பிலும், 32 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 56 லட்சத்து 16 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு  வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் கோட்ட ஆட்சித்தலைவர் ஹஸரத் பேகம், வட்டாட்சியர் ராம்குமார் தனி வட்டாட்சியர் சாந்தி திருவேங்கடம் தனி வட்டாட்சியர் ஓசன்னா பெர்னாண்டோ சங்கரன்கோவில் யூனியன் ஒன்றிய தலைவர் சங்கரபாண்டியன் களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்....

Tags:    

Similar News