சங்கரன்கோவிலில் தீப்பிடித்த வைக்கோல் பாேர்: ரூ.30,000 மதிப்பு தீவனம் சேதம்
சங்கரன்கோவிலில் வைக்கோல் போரில் எரிந்த தீயை விரைந்து சென்று அணைத்த தீயணைப்புத்துறையினர்.;
சங்கரன்கோவிலில் வைக்கோல் போரில் எரிந்த தீயை விரைந்து சென்று அணைத்த தீயணைப்புத்துறையினர்.
சங்கரன்கோவிலில் வைக்கோல் போரில் எரிந்த தீயை விரைந்து சென்று அணைத்த தீயணைப்புத்துறையினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் கீழ 2ம் தெருவில் வசிக்கும் லட்சுமணன் என்பவருடைய வைக்கல் போர் காமராஜர் இரண்டாம் தெருவில் உள்ளது.
இதில் நாத்துச்சோளக்கட்டு மற்றும் வைக்கல் போர் சுமார் 30 ஆயிரம் மதிப்புள்ள மாட்டு தீவனம் தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து தீயனணப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலறிந்து நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் தீயணைப்பு பணியாளர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து மாட்டு தீவன பயிர் கட்டுகளை காப்பாற்றினார்கள். மாட்டு தீவன பயிர்கள் காப்பாற்றப்பட்டது அறிந்து பொதுமக்களும் அதன் உரிமையாளரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள்.