நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சிவகிரி பேரூராட்சியில் காங்கிரஸ் தனித்து போட்டி
சிவகிரி பேரூராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் அனைத்து வார்டுகளிலும் தனித்து போட்டி. ஆலோசணை கூட்டத்தில் முடிவு.;
தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சி தேர்தலில் திமுக காங்கிரஸ் இடையே வார்டு பங்கீடு சுமூகமாக முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சியினர் அனைத்து வார்டுகளிலும் தனித்து கை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று இன்று நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இன்று முதல் கட்டமாக பன்னிரெண்டு வார்டுகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பேரூராட்சி அலுலகத்தில் வேட்பு மனுக்கள் பெற்றனர். மீதம் உள்ள வார்டுகளுக்கு நாளை வேட்பு மனு பெற தீர்மானிக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் N.திருஞானம், மாநில காங்கிரஸ் பொதுகுழு உறுப்பினர் K.கணேசன், சிவகிரி நகர காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் M.சண்முகசுந்தரம், தொகுதி ஓ.பி.சி. தலைவர் S.காந்தி, வட்டார காங்கிரஸ் கலைபிரிவு தலைவர் டெல்லி S.கணேசன், சிவகிரி கூட்டுறவு சங்க டைரக்டர் R.விநாயகர், வட்டார காங்கிரஸ் செயலாளர் P.மருதப்பன், நகர SC.பிரிவு தலைவர் A.சொரிமுத்து, INTUC ராஜு, நகர ஓ.பிசி தலைவர் S.மாரியப்பன், மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.