சங்கரன்கோவிலில் தேவையில்லாமல் சுற்றுபவர்களுக்கு அபராதம்
சங்கரன்கோவிலில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.;
சங்கரன்கோவிலில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித் திரிபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். போதிய காவலர்கள் பணியில் இல்லாததல் கிராமப்புறங்களில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
தமிழத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுபடுத்துவதற்கு ஞாயிற்று கிழமையான இன்று முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிபவர்களை பிடித்து அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர். சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுவதால் துப்புறவு பணியாளர்கள் தூய்மை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சங்கரன்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட காவல்நிலையங்களில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் திருவேங்கடம் அருகே உள்ள கிராமத்தில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதால் போதிய காவலர்கள் இல்லாமல் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அதிகளவில் குற்றச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். எனவே, திருவேங்கடம் பகுதியில் குறைந்த அளவு காவல்துறையினரை பாதுகாப்பு பணியில் அமர்த்திவிட்டு மற்ற காவல்துறையினரை அவரவர் காவல்நிலையத்திற்கு பணிக்கு அமர்த்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்..