சங்கரன்காேவில் அருேக அரசு பள்ளியில் ஒன்றிய சேர்மன் ஆய்வு
சங்கரன்கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சத்துணவின் தரத்தை உண்டு பார்த்து ஆய்வு செய்த ஒன்றிய சேர்மன்.;
புளியம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றி துவக்கப்பள்ளியில் ஒன்றிய சேர்மன் ஆய்வு செய்தார்.
சங்கரன்கோவில் அருகே ஊராட்சி ஒன்றி துவக்கப்பள்ளியில் சத்துணவில் வழங்கப்படும் உணவின் தரத்தை உண்டு பார்த்து ஆய்வு செய்த ஒன்றிய சேர்மன்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தில் உள்ள பஞ்சாயத்துயூனியன் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவுதிட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் சங்கரபாண்டியன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா ஆகியோர் உண்டு பார்த்து ஆய்வு செய்தானர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள், பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் உடனிருந்தனர்.