பாபநாசம் வனச்சோதனை சாவடியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: 43 பேர் கைது

பாபநாசம் வனச்சோதனை சாவடி முன்பு அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் உள்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-23 14:00 GMT

பாபநாசம் வனச்சோதனை சாவடி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர்.

நெல்லை மாவட்டம், பாபநாசம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது.

தற்போது கொரோனா தொற்று காரணமாக சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர் ஆற்றில் நீராடவும், பொங்கலிட்டு, கிடா வெட்டவும் வனத்துறையினர் தடை விதித்து, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வாடகை ஆட்டோவில் பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதனை கண்டித்து பாபநாசம் வனச்சோதனை சாவடி முன்பு இந்து முன்னணி அமைப்பினர், பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் 8 பெண்கள் என சுமார் 43 பேர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர் மேலும் சாலையில் அமர்ந்து போராட்டமும் நடத்தினர். இதைத்தொடர்ந்து வீ.கே.புரம் போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 8 பெண்கள் உள்பட 43 பேரையும் கைது செய்து அழைத்து சென்றனர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகையில், காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் கிடா வெட்டி பொங்கலிடவும், தாமிரபரணி ஆற்றில் குளிக்கவும், இப்பகுதி ஆட்டோவில் பக்தர்களை கோவிலுக்கு அழைத்து செல்லவும் வனத்துறையினர் அனுமதி வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் மிகப்பெரிய தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்றனர்.

Tags:    

Similar News