உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: சங்கரன்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சங்கரன்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்திய திமுக.;

Update: 2021-11-29 16:00 GMT

திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் திமுக. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பரமகுரு தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உள்ள சங்கரநாராயணர் கோமதிஅம்பாள் திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாட்டை திமுகவினர் நடத்தினர். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினரும் ஒன்றிய கவுன்சிலருமான பரமகுரு தலைமையில் நடைபெற்றது.

இதில் திமுக-வை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, வழக்கறிஞர் சந்தனப்பாண்டி, கலைஞர் அகாடாமி ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏரளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News