நாணயத்தின் இரு பக்கங்கள் பிஜேபி- அதிமுக: தூத்துக்குடி எம்பி கனிமொழி பேச்சு

\நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ள பிஜேபியும் அதிமுகவும் தமிழகத்திற்கு அவமானக்கேடு விளைவிக்க கூடியவர்கள் என்றார் கனிமொழி

Update: 2022-02-10 01:30 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலைய பகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய மக்களவை உறுப்பினர் கனி மொழி

நாணயத்தின் இரு பக்கங்கள் பிஜேபி அதிமுக தமிழகத்திற்கு அவமானத்தையும் கேடையும் விளைவிக்க கூடியவர்கள் தான் இவர்கள்- மக்களுக்கு இவர்களால் எதுவும் நடக்கவில்லை என்றார்  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி .

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பழைய பேருந்து நிலைய பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 36 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் மேலும் பேசியதாவது: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் அனைத்து தொகுதிகளை கைப்பற்றி விட்டோம் ஆனால் கோவில்பட்டியை கோட்டை விட்டுவிட்டோம் அதனால் ஒவ்வொரு நாளும் அந்த பாதிப்பை நாம் உணர்ந்து கொண்டு இருக்கின்றோம் ஏனென்றால் இங்கு உள்ள சட்டமன்ற உறுப்பினர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.அதிமுக ஆட்சியில் இருந்தாலும் மக்களுடைய கோரிக்கைகள் பிரச்னைகளை நிறைவேற்றியது இல்லை

முதலமைச்சர் தளபதி தேர்தலுக்கு முன்பாகவே மக்களை சந்தித்து என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தார்களோ அதெல்லாம் நிறைவேற்றி வருகிறார்கள் அதுதான் திமுக ஆட்சி மதத்தின் பெயரால் அடக்குமுறையின் பெயரால் கர்நாடகாவில் கலவரங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.எனவே தமிழகத்தில் பாஜக காலூன்ற வாய்ப்பளித்தது விடக்கூடாது

நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான் பிஜேபியும் அதிமுக. இரண்டு பேரும் தமிழ்நாட்டுக்கு அவமானத்தைத் தேடித் தந்தவர்கள். கேடை விளைவிப்பவர்கள் என்பதை புரிந்து கொண்டு இந்த தேர்தலில் நீங்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். உங்களுக்கும் அரசாங்கத்திற்கும் பாலமாக இருக்கக்கூடிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார் கனிமொழி எம்பி.

கூட்டத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி நகரச் செயலாளர் கருணாநிதி ஒன்றிய செயலாளர் முருகேசன் மாவட்ட துணைச்செயலாளர் ஏஞ்சலா யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ் பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு. காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் திருப்பதி ராஜா, நகர தலைவர் பாண்டியன், மதிமுக இளைஞர் அணி செயலாளர் விநாயக ரமேஷ், மதிமுக மாவட்டச் செயலாளர் ரமேஷ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் காமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News