சங்கரன்கோவில் டாஸ்மாக் பாரில் இரு தரப்பினர் கடும் மோதல்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

சங்கரன்கோவில் டாஸ்மாக் பாரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.;

Update: 2021-10-14 06:30 GMT

சங்கரன்கோவில் நகர் காவல் நிலையம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்; இரயில்வே ஸ்டேசன் அருகே இரண்டு டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் மது அருந்தி விட்டு மதுப்பிரியர்கள் அடிக்கடி அடிதடி, வெட்டு, குத்து போன்ற சம்பவங்கள் தொடாந்து ஈடுபட்டு காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து வருவது வழக்கமான ஒன்றாகும்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இரண்டு பிரிவை சேர்ந்தவர்கள் மது அருந்திவிட்டு உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சம்பந்தமாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் ஒருவருக்கு மண்டை உடைந்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைதொடாந்து இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ளவரை தேடி வருகின்றனர்.

மேலும் மோதி கொண்டவர்கள் வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வடக்குப்புதூர், இருமன்குளம் ஆகிய கிராமங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் தடுப்பதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகினற்னர்.

Tags:    

Similar News