சங்கரன்கோவிலில் தொடர் வழிப்பறியில் ஈடுப்பட்ட இருவர் கைது: போலீசார் விசாரணை

சங்கரன்கோவிலில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை.;

Update: 2021-09-05 12:00 GMT

சங்கரன்கோவில் பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து வழிப்பறி ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கரன்கோவிலில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கடந்த வருடம் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பறித்து சென்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து சங்கரன்கோவில் நகர காவல்துறை ஆய்வாளர் ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடிவந்த நிலையில் நேற்று சங்கரன்கோவில் பகுதியில் வாகன சோதனையின் போது அவ்வழியாக வந்த மது(24) மற்றும் காஜாமைதீன்(23) ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் பெண்ணிடம் இருந்து நகையை பறித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர்.

சங்கரன்கோவில் பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து வழிப்பறி ஈடுபட்டு வந்தள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இருவர்களிடம் இருந்து 5 பவுண் தாலி சங்கிலி, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News