திசையன்விளை அருகே மூதாட்டியிடம் தங்க செயின் பறித்த இருவர் கைது

திசையன்விளை அருகே மூதாட்டியிடம் தங்க செயின் பறித்தாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-15 13:15 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்டம், திசையன்விளை போலீஸ் சரகம் மன்னார்புரம் விலக்கில் கடந்த 10 ம் தேதி நடந்த கிறிஸ்தவ கெபி கொடியேற்று விழாவில் கலந்து கொள்வதற்காக மன்னார்புரத்தைச் சேர்ந்த அற்புத ஜெபமாலை என்பவர் மனைவி ரெஜிஸ் மேரி( ,வயது65) நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது மோட்டர் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், ரெஜிஸ் மேரி கழுத்தில் போட்டிருந்த 6 பவுன் தங்க செயினை அறுத்துக்கொண்டு தப்பி சென்றனர். இது பற்றி திசையன்விளை போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மன்னார்புரம், வாழைத்தோட்டம், குருகாபுரம் ஆகிய இடங்களில் வைத்திருந்த சிசி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்ததில் குற்றவாளிகள் பற்றிய துப்பு கிடைத்தது.

அதன்படி கடந்த 13 ம் தேதி அன்று கும்பிளம்பாட்டைச் சேர்ந்த செல்லத்துரை மகன் அரிச்சந்திர மகராஜா என்ற பாம்பே ராஜாவையும் நேற்று அதே ஊரைச்சேர்ந்த கருப்பசாமி மகன் நல்லதுரை யையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது.

திசையன்விளை காவல் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா, கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது ராதாபுரம், குரும்பூர் காவல் நிலையத்தில் வழக்குகள் இருப்பதாகவும், மேலும் சிசிடிவி கேமராக்கள் குற்றவாளிகளை பிடிக்க உதவியாக இருந்தது என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News