திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது: 25 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது, 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து தனிப் படையினர் அதிரடி நடவடிக்கை;

Update: 2021-12-14 09:34 GMT

திண்டுக்கல்லில் கஞ்சாவிற்பனை செய்த இருவர் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது, 25 கிலோ கஞ்சா பறிமுதல் - எஸ்பி தனிப் படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக எஸ்பி.சீனிவாசனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, எஸ்பி தனிப்படையினர் சார்பு ஆய்வாளர்கள் ஷேக் தாவூத், இசக்கி ராஜா மற்றும் காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் கஞ்சா விற்பனை செய்த செம்பட்டியை அடுத்த சுக்கலாபுரத்தை சேர்ந்த மணியரசன்(30), மதுரையை சேர்ந்த தினேஷ் குமார்(27) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நகர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். நகர் தெற்கு காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். 

Similar News