சங்கரன்கோவிலில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு
சங்கரன்கோவிலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.;
சங்கரன்கோவிலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் 57 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆசிரியர்களும் நகராட்சி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.