சங்கரன்கோவில்: 5 லட்சம் மதிப்பு புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்:2 பேர் கைது

சங்கரன்கோவில் அருகே 5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் 2 பேர் கைது.;

Update: 2021-12-30 13:00 GMT

பறிமுதல் செய்யப்பட்ட  புகையிலைப்பொருட்கள் மற்றும் காருடன் போலீசார்.

சங்கரன்கோவில் அருகே 5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

தென்காசி மாவட்டம் புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் அதிகமாக நடமாடுவதாக காவல்துறைக்கே தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.   மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் புகையிலை பொருட்களை கடத்துபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் குருவிகுளம் பகுதியில் ஐந்து லட்சம் மதிப்பிலான புகையிலை மற்றும் குட்கா கடத்திய தளவாய் புரத்தைச் சேர்ந்த மாரி மற்றும் வென்றிலிங்கபுரத்தைச் சேர்ந்த லக்ஷ்மண குமார் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து குருவிகுளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

Tags:    

Similar News