சங்கரன்கோவில் சங்கரநாரயணர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்
சங்கரன்கோவில் சங்கரநாரயணர் கோமதி அம்பாள் கோவில் ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழா பக்தர்களின்றி கொடியேற்றத்துடன் துவங்கியது.;
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவிலில் ஐப்பசி மாத திருக்கல்யாணத்திருவிழா கோமதி அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் காலை 7.35மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனைதொடர்ந்து கொடிமரத்திற்கு பால், பன்னீர், பழங்கள், விபூதி, வாசனைதிரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.
இத்திருக்கல்யாண திருவிழாவானது 11நாட்கள் நடைபெறக்கூடியது. இதில் 11வது நாள் சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் திருக்கால்யாண நிகழ்வு நடைபெறும்.