திமுக தலைமை அறிவுறுத்தலை ஏற்று திருவேங்கடம் பேரூராட்சி தலைவர் ராஜினாமா

சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் பேரூராட்சி தலைவர் சேர்மத்துரை பதவியை ரஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்ததால் பரபரப்பு.;

Update: 2022-03-09 12:45 GMT
திமுக தலைமை அறிவுறுத்தலை ஏற்று திருவேங்கடம் பேரூராட்சி தலைவர் ராஜினாமா

திருவேங்கடம் பேரூராட்சி தலைவர் சேர்மத்துரை.

  • whatsapp icon

சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் பேரூராட்சி தலைவர் சேர்மத்துரை பதவியை ரஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்ததால் பரபரப்பு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் பேரூராட்சி தலைவர் பதவியானது திமுக கூட்டணி கட்சியான மதிமுகவிற்கு திமுக தலைமை ஒதுக்கிய நிலையில் அதற்கு மாறாக திமுக-வை சேர்ந்த குருவிகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சேர்மத்துரை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு கூட்டணி கட்சியான மதிமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான இடங்களில் திமுகவினர் வெற்றி பெற்றால் அதனை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என திமுகவினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதனைதொடர்ந்து திருவேங்கடம் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சேர்மத்துரை தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக திருவேங்கடம் பேரூராட்சி நிர்வாக அதிகாரியிடம் கடிதம் கொடுத்துள்ளார். அந்த ராஜினாமா கடிதம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பபட்டுள்ளதாக தெரிவித்தார். ராஜினாமா குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவு எடுப்பார் என திருவேங்கடம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News