சங்கரலிங்க சுவாமி கோவிலில் திருவம்பாவை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்
சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமி திருக்கோவிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் திருவம்பாவை திருவிழா துவங்கியது.
சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமி திருக்கோவிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் திருவம்பாவை திருவிழா துவங்கியது
தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில்தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி திருக்கோவிலும் ஒன்றாகும் இத்திருக்கோவிலில் திருவெம்பாவை திருவிழா இன்று காலை 5.46 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க தீபாரதனை நடைபெற்றது.
இத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறும். (திருக்கோவில் உள் பிரகாரத்தில்) விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வரும் 20ம் தேதி காலை நடைபெறுகிறது. குடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும் கட்டளைதாரர் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கதிர்வேல் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.