இதுவரை சரிசெய்யப்படாத செண்பகவள்ளி அணை உடைப்பு; உழவர் முன்னணி ஆலோசகர் பேச்சு
செண்பகவள்ளி அணையின் உடைப்பை சரிசெய்ய அரசு எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை என தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தமிழக உழவர் முன்னணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆலோசகர் வெங்கட்ராமன் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்திற்குப்பின் பேசிய வெங்கட்ராமன், மேற்குதொடாச்சி மலையில் உள்ள செண்பகவள்ளி அணை உரிமையை கேரளா அரசு மறுத்து வருகிறது. தமிழ்நாடு அரசு அதற்காண முயற்சியை உரிய அளவில் எடுத்துச்செல்லவில்லை என்ற வருதத்தை இந்தக் கூட்டம் பதிவு செய்தது.
நாளை சட்டமன்றத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை மானியக் கோரிக்கை வர இருக்கிறது. அதில் கேரள அரசோடு பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனைகளை இந்தப் பட்டியலில் செண்பகவல்லி அணை பிரச்சணையை முக்கியத்துவம் கொடுத்து தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்.
பேச்சுவார்த்தைக்கான குழு அப்படியே இருக்கிறது. அந்த குழுக்களுடைய பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அடுத்தமாதம் மாதம் 21ம் தேதி திங்கள்கிழமை காலை சங்கரன்கோவிலில் பேரணி ஆர்பாட்டத்தை செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு சார்பில் நடத்த இருக்கிறோம்.
அதற்கு பிறகும் இதில் தீர்வு ஏற்படவில்லை என்றால் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம் என்று விவசாய சங்கத்துடன் கலந்து ஆலோசனை செய்த பின்னர் தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் வெங்கட்ராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.