தை அமாவாசை: சங்கரன்கோவிலில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

சங்கரன்கோவிலில் தை அமாவாசை தினமான இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பொதுமக்கள்;

Update: 2022-01-31 12:30 GMT

சங்கரன்கோவிலில் தை அமாவாசை தினமான இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பொதுமக்கள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தெப்பத்தில் தை அமாவாசை தினமான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு திருக்கோவில் நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து சங்கரன்கோவில் கோவில் வாசல் மற்றும் தெற்கு மற்றும் வடக்கு ரத வீதிகளில் உள்ள புரோகிதர்களின் வீடுகளிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்கான தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News