சங்கரன்கோவில் : சுடுகாட்டில் தனிநபர் வேலி அமைத்ததால் பரபரப்பு

சங்கரன்கோவில் அருகே சுடுகாட்டில் தனிநபர் ஒருவர் வேலி அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2021-12-02 13:15 GMT

சங்கரன்கோவில் அருகே சுடுகாட்டில் வேலி அமைத்தது தொடர்பாக பேச்சு நடத்திய அதிகாரிகள். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இலவன்குளம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டை தனிநபர் ஒருவர் வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று இலவன்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்மாள்(75) என்ற மூதாட்டி உடல்நலக்குறைவால் இறந்தார்.

மூதாட்டியின் உடலை கொண்டு சென்று, சுடுகாட்டில் அடக்கம் செய்ய முடியாததால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற காவல்துறையினர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் சுடுகாட்டை சுற்றி வேலி அமைத்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சுடுகாட்டுக்கு செல்ல எந்தவித இடையூறு இருக்காது என வேலி அமைத்தவர் தெரிவித்ததால் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News