சங்கரன்கோவில் அருகே ஊழியரை தாக்கிய இளம்பெண்: வைரல் வீடியாேவால் பரபரப்பு

சங்கரன்கோவில் அருகே ஊழியரை தாக்கிய இளம்பெண். சமூக வலை தளங்களில் பரவுவதால் பரபரப்பு.;

Update: 2021-10-02 06:30 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சமுத்திரம் மகன் ராமகிருஷ்ணன் (50). சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் மகள் பரமேஸ்வரி(20). இருவரும் ராஜபாளையம் சாலையில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் பணி புரிந்து வருகிறார்கள்.

சம்பவத்தன்று பணியில் இருக்கும் போது பரமேஸ்வரி, ராமகிருஷ்ணனை செருப்பால் தாக்கி உள்ளார். இதன் CCTV காட்சிகள் அங்குள்ள கம்பெனியில் பதிவாகி உள்ளது. மேலும் இதன் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இது குறித்து ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் பரமேஸ்வரி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News