சங்கரன்கோவில் டாஸ்மாக், கோவிலில் திருட்டு: 24 மணி நேரத்தில் திருடர்கள் கைது

டாஸ்மாக் மற்றும் கோவில் திருட்டில் ஈடுபட்ட திருடர்களை சிசிடிவி பதிவுகளை கொண்டு 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-09-25 06:30 GMT

கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுடன் போலீசார். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் ஆவுடையாள்புரம் அருள்மிகு மாடசாமி திருக்கோவிலில் உண்டியலை உடைத்து அதில் இருந்த 1000-க்கும் மேற்பட்ட பணம் மற்றும் திருவேங்கடம் டாஸ்மாக் மதுபான கடையின் பூட்டை உடைத்தும் 12 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும் நேற்று திருடர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய  மேலஆவாரம்பட்டி பகுதியை சேர்ந்த கோபிநாத்பிரபு, பால்பாண்டி, பொன்ராஜ் ஆகிய இளைஞர்களை சிசிடிவி கேமராக்கள் அடிப்படையில் 24 மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News