சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் திருவிழா

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருகோவிலில் சூரசம்ஹார விழாவில் ஆறுமுகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.;

Update: 2021-11-10 01:45 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில்,  கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் சூரசம்ஹாரம் நிகழ்வானது நடைபெறவில்லை. எனினும், எளிமையாக  ஆறுமுகப் பெருமானுக்கு பால், சந்தனம், குங்குமம், தேன், வாழைப்பழம், மஞ்சள், திருநீறு உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகங்களும் விஷேச அலங்காரங்கள் மற்றும் தீபாரதனை காட்டப்பட்டன.

இதனை தொடர்ந்து, ஸ்ரீஆறுமுகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags:    

Similar News