சங்கரன்கோவில் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சங்கரன்கோவில் அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் மாணவ மாணவியர்கள் உள்ளிருப்பு போராட்டம்.;

Update: 2021-12-21 11:45 GMT

சங்கரன்கோவில் அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சங்கரன்கோவில் அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியானது சங்கரன்கோவில் நெல்லை செல்லும் சாலையில் உள்ளது. இந்த கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சரிவர நிற்காததால் இன்று பனவடலிசத்திரத்திலிருந்து குணசேகரன்(22) என்ற மாணவன் கூட்ட நெரிசலால் பேருந்து படிகட்டில் பயணம் செய்து வந்துள்ளார்.

கல்லூரிப் பேருந்து நிறுத்தம் வந்தவுடன் இறங்குவதற்கு முற்பட்டபோது பேருந்து வேகமாக சென்றதால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குணசேகரன் என்ற மாணவன் விழுந்ததை அறிந்த கல்லூரி மாணவர்கள் 500க்கு மேற்பட்டோர் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி வளாகத்தினுள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News