சங்கரன்கோவில் அருகே கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவ, மாணவிகள் போராட்டம்
சங்கரன்கோவில் அருகே கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்.
சங்கரன்கோவில் அருகே கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கோஷங்களை எழுப்பி போராட்டம்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பயின்று வந்த மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை இரத்து செய்து அவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நிர்வாகத்திற்கும், காவல்துறையினருக்கும் எதிராக கோஷங்களை எழுப்பி கல்லூரி நுழைவு வாயிலில் அமர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். கடந்த சனிக்கிழமை இதே போல் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று குறிப்பிடதக்கது.