சங்கரன்கோவிலில் மாணவர்களுக்கான மாநில அளவிலான சிலம்பம் போட்டி

சங்கரன்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.

Update: 2023-02-07 07:44 GMT

சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

சிலம்பம் தற்காப்பு கலை ஆராய்ச்சி மையம் சார்பில் சங்கரன்கோவிலில் மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது.

மனிதர்கள் தங்களது உடல் வலிமையும் மன வலிமையும் மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு உடற்பயிற்சிகளையும், யோகா, சிலம்பம், களரி, சிலமபம் போன்ற தற்காப்பு கலைகளையும் பயின்று வருகின்றனர். இதில் தமிழர்களின் மிகவும் பழமையான வீரக்கலைகளில் ஒன்றான சிலம்பம் சுற்றுவது தற்போது மாணவ மாணவிகள் மத்தியில் அதிக அளவில் பிரபலம் ஆகி உள்ளது.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலை பள்ளிவளாகத்தில் சிலம்பம் ட்ரஸ்ட் மற்றும் சிலம்பம் தற்காப்பு கலை ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ,சிவகங்கை, தஞ்சாவூர் ,சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சிலம்பப் பயிற்சி பெறும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் கதம்பவரிசை, நெடுங்கம்புஅலங்கார வீச்சு, கம்பஃட் பைட், தொடும் முறை உள்ளிட்ட 32 வகையான சிலம்பம் விளையாட்டுகளில் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று  தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அப்போது மாணவர்கள் தங்களது பயிற்சியின் தனி திறமையையும் வெளிப்படுத்தினர். இதில் கிராண்ட் மாஸ்டர் அருணாச்சலமணி ஆசான், மார்சல் ஆர்ட்ஸ் பயிற்சியாளர் குமார் ஆகியோர் சிறப்பாக விளையாடிய மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பதக்கங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானபெற்றோர்களும் கலந்து கொண்டு தங்களது குழந்தைகளின் சிறந்த விளையாட்டை கண்டு உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News