சங்கரன்கோவிலில் உலக அமைதி வேண்டி சிறப்பு யாகம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சங்கரன்கோவிலில் உலக அமைதி வேண்டி மகாயோகம் சார்பில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உலக அமைதி வேண்டி மகாயோகம் சார்பில் அருட்பெருஞ்ஜோதி யாகம், அகன்ற ஒளியேற்றும் பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தியானம் செய்து அருட்பெருஞ்ஜோதி யாகத்தை வணங்கிச் சென்றனர். பின்னர் அனைவருக்கும் அறுசுவையுடன் கூடிய பிரசாதம் வழங்கப்பட்டது...
இதில் காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மகாயோகம் சார்பில் உலக நன்மைக்காகவும் மக்கள் ஆரோக்கியமாக வாழவும் பொருளாதாரம் மேம்படும் நாடு நலம் பெறவும் சித்தர் முறை அருட்பெருஞ்ஜோதி யாகம் மற்றும் அகன்ற ஒளியேற்றும் பூஜை நடைபெற்றது.
இதில் மகாயோகம் தலைமை ரிஷி பல்ராமையா, உலக சாதனையாளர் ரஞ்சனா ரிஷி ஆகியோர் தலைமையில் சிறப்பு அகன்ற ஒளி ஏற்றும் பூஜை அருட்பெருஞ்ஜோதி யாகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சங்கரன்கோவில் மகா யோக தியான அன்பர்கள் சார்பில் செய்திருந்தனர்.