சங்கரநாராயணர் சுவாமி கோவிலில் சண்முகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர்சுவாமி திருக்கோவிலில் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் தீபாராதனை நடைபெற்றது.;
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர்சுவாமி திருக்கோவிலில் சண்முகருக்கு பஞ்ச வாத்தியங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்களுடன் தீபாராதனை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் கோமதிஅம்பாள் திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைதொடர்ந்து ஒவ்வொரு நாளும் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் தீபாராதனை நடைபெற்று வந்தன.
கந்த சஷ்டி திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சண்முகர், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு பால், பன்னீர், திரவியம், தயிர், இளநீர், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களுடன் சிறப்பு அபிஷேகளுடன் தீபாராதனை நடைபெற்றது. ஐந்தாம் நாள் கட்டளைதாரர்களான பஞ்சாயத்து யூனியன் அலுவலத்தில் உள்ள அனைத்து பணியாளர்களுடன் ஒன்றிய பெருந்தலைவர் சங்கரபாண்டியன் உட்பட ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.