சங்கரன்கோவில் அருகே வீட்டில் புகுந்த சாரைப்பாம்பு: தீயணைப்புத்துறை மீட்பு
சங்கரன்கோவில் அருகே வீட்டினுள் புகுந்த ஆறடி நீளமுள்ள சாரைப்பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
சங்கரன்கோயில் அருகே உள்ள வடநத்தம்பட்டி தங்கராஜ் காலனி பால்ராஜ் என்பவரது வீட்டில் அவரது மகன் பேத்திக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்திக் கொண்டிருந்தனர். அப்பபோது சுமார் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு கூட்டத்தில் புகுந்தது.
இதனால் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அச்சத்தால் பதறியடித்துக்கொண்டு சாலைப்பகுதியில் வந்து நின்றனர். இதனையடுத்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் கருப்பையா நிலைய அலுவலர் போக்குவரத்து ஜெயராஜ் சிறப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து வேலுச்சாமி ஆகியோர் பணியாளர்களுடன் விரைந்து வந்தனர்.
பின்னர் வீட்டினுள் புகுந்த சாரைப் பாம்பை பிடித்து பொது மக்களின் அச்சத்தை போக்கினர். அந்த பாம்பை தீயணைப்புத்துறையினர் காட்டுப்பகுதியில் விட்டனர்.