பள்ளி மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுத்த கடை உரிமையாளர் கைது

பள்ளி மாணவர்களுக்கு ஊர் கட்டுப்பாடு என்று கூறி தின்பண்டங்கள் வழங்க மறுத்த விவகாரத்தில் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-09-17 11:01 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிடர் சிறுவர்களுக்கு கடையில் தின்பண்டம் தரமாட்டோம் என்றும் ஊர் கட்டுப்பாடுள்ளது என்றும் கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மகேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமம் பஞ்சாகுளம் இந்த கிராமத்தில் கடந்த 2வருடங்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாடும்போது இளைஞர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த இளைஞர்களை மாற்று சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் ஜாதி ரீதியாக திட்டியதால் மாற்று சமூகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் உட்பட நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்தே ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்த பெண்களையும் குழந்தைகளையும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் கேலி பேசுவதும், கிண்டல் அடிப்பதுமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் முன்னர் ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்த பள்ளி குழந்தைகளுக்கு கடையில் தின்பண்டங்கள் தர முடியாது என்றும் ஊர் கட்டுப்பாடு வைத்துள்ளதும் என்றும் கூறி வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார் மகேஸ்வரன் சமுதாய குழுவில் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் இந்த வீடியோவானது நேற்று இரவு வைரலானதை தொடர்ந்து மகேஷ் என்பவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில்,   வழக்கு தொடர்பாக அவரை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது கடைக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்துள்ளனர்

Tags:    

Similar News