சங்கரன்கோவில் பகுதிகளில் கடும் உரத்தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை

சங்கரன்கோவில் பகுதிகளில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தும் உரம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிய விவாசயிகள்.

Update: 2021-11-12 15:00 GMT

சங்கரன்கோவில் பகுதிகளில் உரத்தட்டுப்பாட்டால் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் விவசாயிகள்.

சங்கரன்கோவில் பகுதிகளில் உரம் வாங்குவதற்காக பல மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்தும் உரம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் செல்லும் விவாசயிகள்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள குளத்திற்கு குறைந்த அளவே தண்ணீர்; வந்துள்ளது. அந்த தண்ணீரை வைத்து விவசாயிகள் நெல், உளுந்து உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை பயிர் செய்துள்ளனர்.

ஆனால் அதற்கு தேவையான யூரிய உட்பட பல்வேறு உரங்கள் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கிடைக்காததால் உரக்கடைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பல மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்தும் அதில் ஒருசில விவசாயிகள் தவிர மற்ற விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

எனவே தமிழக அரசு சங்கரன்கோவில் பகுதிகளில் உரத்தட்டுப்பாட்டை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்..

Tags:    

Similar News