தென்காசி அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 நபர்கள் கைது
தென்காசி அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு.;
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள், போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று KV நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்து ரெட்டியப்பட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் ராஜகோபால் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் முத்து ரெட்டியப்பட்டியை சேர்ந்த பெருமாள்சாமி (51) என்பவரின் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூபாய் 1,80,450 மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இதுகுறித்து பெருமாள்சாமி(61) சுப்புராஜ்(45) குருநாதன்(60) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து பெருமாள்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 22,644 மதிப்பிலான குட்கா பொருட்களை சார்பு ஆய்வாளர் சங்கரநாராயணன் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் கைப்பற்றி சுப்புராஜ்(42),குருநாதன்(60) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சுப்புராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.